×

பெரும் எதிர்பார்ப்பில் இன்று வாக்கு எண்ணிக்கை டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்?

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த சனிக்கிழமை முடிந்தது. தேர்தலில் 62.59% வாக்குபதிவானது. வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. காலை சுமார் 11 மணிக்கெல்லாம் முன்னணி நிலவரம் குறித்தும் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பற்றியும் ஓரளவுக்கு தெரிந்துவிடும். முடிவுகள் அனைத்தும் இன்றே அறிவிக்கப்படும். வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு குறிப்பிட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணிக்காக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் முழு அளவில் செய்துள்ளது. இந்த மையங்களில் துணை ராணுவ படையினர் மற்று உள்ளூர் போலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்கள் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. வாக்குகள் எண்ணும் பணிணையை பார்வையிட 33 சிறப்பு பார்வையாளர்கள் இருப்பார்கள் என ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் ஆளும் ஆத்மி கட்சியே மூன்றாம் முறையாக ஆட்சி பிடிக்கும் என தெரிவித்துள்ளன. 15 ஆண்டுகள் அட்சி செய்த காங்கிரஸ் பிரசாரத்தில் இம்முறை பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை. அதே சமயத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, பாஜ கட்சி தனது முழு பலத்தையும் திரட்டி பிரசாரம் மேற்கொண்டது.

Tags : Delhi , Today, ballot count, Delhi, rule, hold, who?
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...